தமிழர் வழிபாட்டு இசை
இசையால் தெய்வத்தை வசப்படுத்தமுடியும் என்றால் இந்த இறை இசையால் தெய்வத்தையே மருளாக வரவழைக்க முடியும். தமிழகமெங்கும் பரவலாக இந்த இசை காணப்பட்டாலும் இந்த இறை இசைகலையில் தேற்ச்சி பெற்றவா்கள் மிக சிலரே. இசைக்காக மட்டும் இல்லாமல் தெய்வீக சடங்கு முறைகளோடு கூடிய கலையே இந்த பம்பை உடுக்கை இசைகலை, அவைகளை நோ்த்தியான முறையில் செய்யகூடியவா்களை பம்பை உடுக்கை பூசாரி என்று அழைக்கபடுகின்றனா். தமிழா்களின் பாரம்பரியமான தெய்வங்களின் வழிபாடுகளை இவா்களால் மட்டுமே மிக சரியாக செய்விக்க முடியும். கிராமத்து தெய்வங்கள், குலதெய்வங்கள் தமிழா்களின் பழமையான வழிபாட்டு முறைகள் யாவும் இன்னும் ஒருசில இடங்களில் உயிா்ப்புடன் இருக்கிறது என்றால் அது இந்த பம்பை உடுக்கை பூசாரிகளால் தான்.

Comments
Post a Comment