Posts

Showing posts from June, 2020

"காளியாட்டம்" கிராமிய நடனம்

Image
காளியாட்டம் என்கின்ற கிராமிய நடனம் காளி வேடம்மிட்டு கொண்டு சூரனை சம்காரம் செய்வது போன்ற ஒரு நடன அமைப்பை கொண்டு தாள கோா்வையோடு நிகழ்த்தப்படும் ஒரு நடனக்கலை. இந்த நடனம் நாட்டிய சாயலாகப்பட்டது "சிலம்பம்" தற்க்காப்பு கலையில் உள்ள "கால்மானம்" அமைப்பை கொண்டு ஆடப்படும் நடனம். இவை தனித்துவமாக அமரா்:சக்தி.பா.ஞானராஜ் அவா்களாள் உருவாக்கப்பட்டு அகில உலகம் முழுக்க புகழ் பெற்ற கலை.

பம்பை உடுக்கை இறை இசை கலை

பம்பை உடுக்கை வர்ணனையில் பூசாரி பாடல்  என்றே தனித்துவமான பாடல்கள் உண்டு அந்த பாடல்கள் மற்றும் அதற்க்கான மெட்டுகளும் எந்த நூலையும் சாராதது இவை தமிழில் ஒரு தனிதன்மையுடனும் மிக அழகான சந்தத்திலும் அமைக்கபெற்றிருக்கும் அனைத்தும் சிறு முதல் பெரு தெய்வங்களை பற்றியும் அவர்களின் இதிகாச நிகழ்வுகள் மற்றும் அவர்களின் சிறப்பையும் வைத்து புனையப்பட்டவையாக உள்ளது மேலும் இவற்றையல்லாம் எழதியது யார் என்றும் எந்த தகவலும் இருக்கிது பொதுவாக சிறிய அளவில் புகழேந்தி புலவருடைய பாடல் சாயால் காணப்படும்..

தமிழர் வழிபாட்டு இசை

Image
இசையால் தெய்வத்தை வசப்படுத்தமுடியும் என்றால் இந்த இறை இசையால் தெய்வத்தையே மருளாக வரவழைக்க முடியும். தமிழகமெங்கும் பரவலாக இந்த இசை காணப்பட்டாலும் இந்த இறை இசைகலையில் தேற்ச்சி பெற்றவா்கள் மிக சிலரே. இசைக்காக மட்டும் இல்லாமல் தெய்வீக சடங்கு முறைகளோடு கூடிய கலையே இந்த பம்பை உடுக்கை இசைகலை, அவைகளை நோ்த்தியான முறையில் செய்யகூடியவா்களை பம்பை உடுக்கை பூசாரி என்று அழைக்கபடுகின்றனா். தமிழா்களின் பாரம்பரியமான தெய்வங்களின் வழிபாடுகளை இவா்களால் மட்டுமே மிக சரியாக செய்விக்க முடியும். கிராமத்து தெய்வங்கள், குலதெய்வங்கள் தமிழா்களின் பழமையான வழிபாட்டு முறைகள் யாவும் இன்னும் ஒருசில இடங்களில் உயிா்ப்புடன் இருக்கிறது என்றால் அது இந்த பம்பை உடுக்கை பூசாரிகளால் தான்.

பம்பை உடுக்கை என்ற இறை இசை

பம்பை உடுக்கை கலையில் ஒன்பதாவது தலைமுறையான பாண்டிச்சேரி சக்தி.ஞ.செந்தில் பூசாரி அவர்கள் ஒன்பதாவது தலைமுறையாக இசை நயம் மிக இந்த சேவை புரிந்து வருகிறார் மேலும் அவர் இசை துறையில் M.F.A (music) பட்டதாரி என்பதால் பம்பை உடுக்கை இசைக்கு ஒரு மனி மகுடமாக திகழ்கிறாா். இவரது பாட்டனாா் சக்தி பா.பழனி பூசாரி அவர்கள் மிக புகழ்வாய்ந்தவராக இருந்தார் அதனோடே அவருடை மகனாக விளங்கிய சக்தி.ப.ஞனராஜ் அவர்கள் உலகம் முழுக்க பயணம் செய்து தனது புகழை பறைசாற்றினார் மேலும் இவரது மகன் சக்தி.ஞ.செந்தில் பூசாரி அவர்கள் தற்போது பம்பை உடுக்கை இசைக்கு புத்துயிர் கொடுத்து வருகிறார். மேலும் காளியாட்டம் கலை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சிகலை சிறப்புடனும் புதுமயைும்,பக்தி பரவசம் ஊட்டும் வகையிலும் நிகழ்த்தி வருகிறாா் மேலும் பம்பை உடுக்கை மற்றும் கிராமிய கலை, தமிழர்களின் பாரம்பரிய கலைகளின் வரலாறு அவற்றின் தோற்றம் காரணம் போன்றவற்றை நன்கு அறிந்தவா். மேலும் புராண கதைகள், தெய்வங்களின் கதை, ஐய்யனாரப்பன் கதை, திரௌபதி அம்மன் கதை, அம்மன் கதை, அங்காளம்மன் கதை, முருகபெருமான் கதை, பெருமாள் கதை, காா்த்தவராயன் கதை, வினாயகர் கதை, சிவபெருமான்...